ஸ்ரீராம நவமி
ஸ்ரீராம நவமி. பகவான் ஸ்ரீராமச்சந்திரரின் அவதார திருநாள். ஸ்ரீராமாவதாரத்தில் பகவான் ஒரு மனிதராகப் பிறந்தவர் எங்ஙனம் இருக்க வேண்டும் என்பதற்கு உதாரண புருஷராக வாழ்ந்தார்.
ஒரு நல்ல அரசர், கணவன், சகோதரர் மற்றும் நண்பர் போன்ற அனைத்து உறவுகளுக்கும் ஓர் முன்னுதாரணமாக திகழ்ந்தவர் ஸ்ரீராமச்சந்திரர்.
ஸ்ரீராம சரிதம்
தேவர்களால் பிரார்த்திக்கப்பட்ட தால், பரம சத்தியமான பரமபுருஷர் தமது அம்சத்துடனும், அம்சத்தின் அம்சங்களுடனும் ராமர், லக்ஷ்மணர், பரதன் மற்றும் சத்ருக்னர் எனும் திருநாமங்களுடன் நேரடியாகத் தோன்றினார். (அதாவது வாசுதேவர், சங்கர்ஷணர், பிரதியும்னர் மற்றும் அநிருத்தர் ஆகியோ ரின் அவதாரங்களே இவர்கள்.)
ஸ்ரீராமர், விஸ்வாமித்திரரின் யாக அரங்கில், இரவு நேரத்தில் அறிவில்லா மல் சஞ்சரித்த பல அசுரர்களையும், இராட்சஸர்களையும், காட்டு மிராண்டி களையும் லக்ஷ்மணரின் முன்னிலையில் கொன்றார். சீதையின் சுயம்வரச் சடங் கில் இவ்வுலக வீரர்களில் மத்தியில் பிரம்மாண்டமான சிவதனுசை மிக எளிதாக உடைத்தார். இதன்மூலம் பகவானின் மார்பில் எப்பொழுதும் உறையும் ஸ்ரீதேவியின் அவதாரமான வவசீதா தேவியை மணம் புரிந்தார்.
அயோத்தியின் மன்னராக முடிசூட இன்னும் சில கணங்களே இருந்த போதிலும், தன் தந்தையின் உத்தரவை நிறைவேற்றுவதற்காக பகவான் ஸ்ரீராமச்சந்திரர் தமது இராஜ்யம், செல்வம், நண்பர்கள், உறவினர்கள், வசிப்பிடம் முதலான அனைத்தையும் துறந்து, லக்ஷ்மணர் மற்றும் சீதையுடன், பதினான்கு ஆண்டுகள் வனவாசம் மேற்கொண்டார்.
வனவாசத்தின் போது சீதையை அபகரிப்பதற்காக, இராவணன் மாரீசன் எனும் அசுரனை ஒரு தங்க மானின் உருவில் அனுப்பினான். அந்த அற்புத மானைக் கண்ட ஸ்ரீராமர், சீதையை மகிழ்விக்கும் பொருட்டு, அம்மானைப் பிடித்து வரச் சென்றார். ஸ்ரீராமர் இல்லாத இந்த சமயத்தைப் பயன்படுத்திக் கொண்ட இராவணன் சீதையை கடத்திச் சென்றான். பிறகு பகவான் ராமச்சந்திரரும், லக்ஷ்மணனும் வனம் முழுவதிலும் சீதையைத் தேடியலைந்த னர். அப்போது ஓரிடத்தில் இராவணனால் இறகுகள் துண்டிக்கப்பட்டு குற்றுயிரும், குலையுயிருமாக இருந்த ஜடாயுவைக் கண்ட ஸ்ரீராமர் இராவணின் கொடிய செயலைஅறிந்து வேதனையுற்றார்
பிறகு சீதையை மீட்பதற்காக இந்து மகா சமுத்திரத்தின் மீது கற்களாலான இராஜவீதி யன்றை அமைத்தார். மரம் செடி கொடிகளைக் கொண்ட பெரும் மலைச் சிகரங்கள் வானர வீரர்களால் பெயர்த்தெடுக்கப்பட்டு சமுத்திரத்தில் வீசப்பட்டன. அவை பகவானின் ஆணையினால் மிதக்க ஆரம்பித்து, பிரம்மாண்டமான பாலமாக உருவாகி, இதற்கு பெயர் தான் பகவானின் சர்வசக்தி என்று நிரூபிக்கும் வண்ணம் அமைந்தது. .
பிறகு ஸ்ரீராமர், விபீஷணர் வழிகாட்ட, சுக்ரீவன், நீளன் மற்றும் ஹனுமான் ஆகியோரின் தலைமை யிலான வானர வீரர்களுடன் சமுத்திரத் தைக் கடந்து இலங்கையைத் தாக்கினார். லக்ஷ்மணரின் உதவியுடன் பகவான் ராமச்சந்திரரின் படை இராட்சஸ வீரர்கள் அனைவரையும் கொன்றது. தன்னுடைய வீரர்கள் மடிந்ததைக் கண்ட இராட்சஸ ராஜனான இராவணன் கடுங்கோபமுற்று ஸ்ரீராமரை கூரிய அம்புகளால் தாக்கினான். பின் பகவான் ராமச்சந்திரர் தமது வில்லில் ஓரம்பைப் பொருத்தி இராவணனை நோக்கி விட்டார். அந்த அம்போ, வஜ்ராயுதம் போல் இராவணனின் இதயத்தை துளைத்ததால், அவன் தன் பத்து வாய்களிலிருந்தும் இரத்தம் கக்கிக் கொண்டு கீழே விழுந்தான்.
அதன் பிறகு இலங்கையின் பொறுப்பை வீபிஷணருக்குக் கொடுத்த பகவான் ஸ்ரீராமச்சந்திரர், தனது வனவாசகாலம் முடிவுற சீதா தேவியுடன், ஹனுமான், சுக்ரீவன் மற்றும் தம்பி லக்ஷ்மணன் ஆகியோரால் சூழப்பட்டவராய் அயோத்திக்குத் திரும்பினார்.
பிரம்ம தேவரைப் போன்ற மகா புருஷர்களும் மற்ற தேவர்களும் பகவானின் செயல்களை பெரு மகிழச்சியுடன் போற்றிப் புகழ்ந்தனர்.
பரமபுருஷரான பகவான் ஸ்ரீராமச்சந்திரரின் சரிதத்தினை பற்றிக் கேட்பவர்கள்
பொறாமை என்னும் நோயிலிருந்தும், கர்ம பந்தத்திலிருந்தும் விடுபட்டு முக்தியடைவர்.
– ஸ்ரீமத் பாகவதம் 9.11.23 –
ஸ்ரீராம நவமியன்று செய்ய வேண்டியது என்ன?
*1. நாம ஜபமே முதல் முக்கியம்:* ஸ்ரீராமர் அவதரித்த ஸ்ரீராம நவமி அன்று அதிகாலையில் எழுந்து ஸ்ரீராமரின் திருநாமத்தை உச்சரித்து வழிபட வேண்டும். ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண; கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே; ஹரே ராம ஹரே ராம; ராம ராம ஹரே ஹரே என்ற பதினாறு வார்த்தைகளடங்கிய மஹாமந்திரத்தை ஒரு முறை உச்சரித்தால் 16 முறை ‘ராம’ நாமம் சொன்ன பலனும், 16000 முறை ‘விஷ்ணு’ நாமம் சொன்ன பலனும் கிடைக்கும். எனவே ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தை அதிக பட்சம் உச்சரிக்கலாம்.
*2. ஸ்ரீராம நவமி விரதம்*:
‘‘ஸ்ரீராம நவமி விரதத்தை பக்தியுடன் கடைபிடிப்பவர், எல்லா பாவங்களிலிருந்தும் விடுபட்டு,
தனது வாழ்வில் முழு வெற்றியை அடைவார்’’ என்று ஹரி பக்தி விலாசம் குறிப்பிடுகிறது.
ஸ்ரீராம நவமியன்று சூரிய அஸ்தமனம் வரை விரதம் இருப்பது நல்லதாகும்.
பொதுவாக முழு விரதம் கடைபிடித்து பகவானை வழிபடுவது சிறப்பு. உடல் நலம் குறைந்தவர்கள் நீர், பால், பழம் உட்கொண்டு ஏகாதசி விரதம் போல் கடைபிடிக்கலாம்.
*3. ஸ்ரீராம சரிதம் :*
ஸ்ரீராம நவமி அன்று ஸ்ரீராமரின் தெய்வீக சரிதத்தை பற்றி படிப்பதும், கேட்பதும் முக்கியமாகும். எனவே வால்மீகி ராமாயணம் படிக்கலாம். ஸ்ரீமத் பாகவதத்தில் ஒன்பதாம் காண்டத்தில் உள்ள ஸ்ரீராம அவதாரம் பற்றிய பகுதிகளையும் படிக்கலாம். இஸ்கான் கோயில்களில் நடைபெறும் ஸ்ரீராமாயண சிறப்புரைகளில் பங்கேற்பது மிகவும் சிறப்பு.
*4. ஸ்ரீராம நவமி தரிசனம்*:
ஸ்ரீராம நவமி அன்று குடும்பத்தினருடன் கோயிலுக்குச் சென்று பகவானை தரிசிப்பது மிகவும் முக்கியமாகும். இஸ்கான் கோயில்களில் ஸ்ரீராம நவமியை முன்னிட்டு சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இஸ்கான் தங்களை அன்புடன் வரவேற்கிறது.
மேலும் விபரங்களுக்கு 7217216001 என்ற இஸ்கான் வாட்ஸ் ஆப்ல் தொடர்பு கொள்ளலாம்.
– ISKCON Madurai, Tirunelveli & Periyakulam.
Phone / Whatsapp: 721 721 6001
ஸ்ரீராம நவமி பற்றி மேலும் படிக்க:
Rama navami – click here to view tamil pdf